நாக மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
நாக மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
கரூர் மாவட்டம், இனுங்கூர் ஊராட்சி, ரத்தினபுரியில் பிரசித்தி பெற்ற நாக மாரியம்மன் கோவில் உள்ளது. இக்ேகாவிலில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிேஷகம் நடத்த முடிவு ெசய்யப்பட்டது. அதன்படி கடந்த 21-ந்தேதி காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் மேளதாளத்துடன் கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது. பின்னர் முதல் கால பூஜை, இரண்டாம் கால பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடந்தது. நேற்று காலை நாகமாரியம்மன் கோவில் கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பின்னர் சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.