நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழக சட்டக்கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆந்திர மாநிலம் புத்தூரில் தமிழக சட்டக்கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வேலூர் தொகுதி செயலாளர் சரத்குமார் தலைமை தாங்கினார். வேலூர் மாவட்ட செயலாளர் தினேஷ்குமார், மாவட்ட பொருளாளர் திருகுமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக தலைமை நிலைய பேச்சாளர் இடும்பாவனம் கார்த்திக் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமிழக சட்டக்கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதில் செய்தி தொடர்பாளர் மணிமாறன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.