மாயமான பெண் கிணற்றில் பிணமாக மீட்பு

கோவையில் மாயமான பெண், கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-01-01 18:45 GMT

பேரூர்

கோவையில் மாயமான பெண், கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பெண் மாயம்

திருப்பூரை சேர்ந்தவர் பழனிகுமார். இவர் பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சுபஸ்ரீ (வயது 34). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

சுபஸ்ரீ, கோவையில் ஈஷா யோகா மையத்தில் 7 நாட்கள் பயிற்சி பெற செல்வதாக கணவர் பழனிகுமாரிடம் கூறி விட்டு கடந்த மாதம் 11-ந் தேதி கோவை வந்தார். அங்கு பயிற்சி முடிந்து 18-ந் தேதி சுபஸ்ரீ வீட்டிற்கு செல்ல வில்லை.

இதனால் பழனிகுமார் தனது மனைவியை தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் முடிய வில்லை. இதனால் பழனிகுமார், கோவை வந்து ஆலாந்துறை போலீஸ் நிலையில் கடந்த மாதம் 19-ந் தேதி புகார் அளித்தார்.

கேமராவில் பதிவான காட்சிகள்

அதில், யோகா பயிற்சிக்கு வந்த தனது மனைவி சுபஸ்ரீ மாயமாகி விட்டார். அவரை கண்டுபிடித்து தர வேண்டும் என்று கூறி இருந்தார்.அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிக ளை ஆய்வு செய்தனர்.

அதில் சுபஸ்ரீ ரோட்டில் நடந்து செல்வதும், அந்த வழியாக வந்த காரில் ஏறி சிறிது தூரம் சென்றதும் அதில் இருந்து இறங்கி ஓடுவது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தன. அதை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

கிணற்றில் பெண் பிணம்

இதையடுத்து மாயமான சுபஸ்ரீயை கண்டுபிடிக்க 6 தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அவரை தேடி வந்தனர்.

இந்த நிலையில், செம்மேட்டை அடுத்த காந்தி காலனியில் உள்ள விவசாய கிணற்றில் பெண் பிணம் மிதப்பதாக ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

உடனே போலீசார் மற்றும் தொண்டாமுத்தூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி கிணற்றில் இறங்கி, இளம்பெண் உடலை வெளியே மீட்டு கொண்டு வந்தனர்.

கொலையா? விசாரணை

பின்னர், அந்த உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து மீட்கப் பட்ட பெண் யார்? என்பது குறித்து போலீசார் விசாரித்தனர். இதில், கிணற்றில் பிணமாக கிடந்தது மாயமான சுபஸ்ரீயாக இருக்கலாம்? என்று கருதிய போலீசார் பழனிகுமாருக்கு தகவல் கொடுத்தனர்.

உடனே அவர் கோவை வந்து, கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட பெண் உடலை பார்த்து அது தனது மனைவி சுபஸ்ரீ தான் என்ப தை உறுதி செய்தார்.

இதையடுத்து சுபஸ்ரீ கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது அவரை கொன்று உடலை கிணற்றில் வீசி விட்டு சென்றார்களா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவையில் மாயமான பெண், கிணற்றில் பிணமாக மீட்கப் பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்