போலியான பார்சல் அனுப்பி பணமோசடியில் ஈடுபடும் மர்மநபர்கள்

போலியான பார்சல் அனுப்பி நூதன முறையில் பணமோசடியில் ஈடுபடும் மர்மநபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பொதுமக்களுக்கு சைபர் கிரைம் போலீசார் அறிவுரை வழங்கி உள்ளனர்.

Update: 2022-12-08 14:43 GMT

போலியான பார்சல் அனுப்பி நூதன முறையில் பணமோசடியில் ஈடுபடும் மர்மநபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பொதுமக்களுக்கு சைபர் கிரைம் போலீசார் அறிவுரை வழங்கி உள்ளனர்.

போலியான பார்சல்

வேலூர் மாவட்டத்தில் இணைய குற்றங்கள் அதிகரித்து வருகிறது. பகுதிநேர வேலை தருவதாகவும், வங்கியில் இருந்து அதிகாரிகள் பேசுவது போன்றும் மர்மநபர்கள் பணத்தை திருடி வந்தனர்.

இதுபோன்ற குற்ற செயல்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. மேலும் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சார்பிலும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

எனினும் இணையகுற்றங்கள் புதிது, புதிதாக பல்வேறு வகைகளில் உருவெடுத்து வருகிறது. விழிப்புணர்வு இல்லாத பலரும், விழிப்புணர்வு இருப்பவர்கள் கூட சில நேரங்களில் ஏமாந்து விடுகின்றனர்.

இந்தநிலையில் தற்போது வீட்டுக்கு போலியான பார்சல் அனுப்பி அதன் மூலம் நூதனமாக வங்கியில் இருந்து பணம் எடுக்கும் குற்ற சம்பவங்கள் நடப்பதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

பணத்தை திருட...

கையில் பார்சலுடன் உங்கள் வீட்டுக்கு மர்மநபர்கள் வருவார்கள். அவர்கள், உங்களுக்கு பார்சல் வந்துள்ளது டெலிவரி செய்ய வேண்டும் என்று அழைப்பார்கள்.

நீங்கள் ஆர்டர் எதுவும் செய்யவில்லை என்றால், உங்களுக்கு தவறுதலாக இந்த பார்சல் வந்திருக்கும் எனவே செல்போனுக்கு வரும் ஓ.டி.பி. எண்ணை தெரிவியுங்கள்.

நாங்கள் அதை ரத்து செய்து விடுகிறோம் என்று கூறுவார்கள். அதை நம்பி உங்களுடைய செல்போனுக்கு வரும் ஓ.டி.பி. எண்ணை அவர்களிடம் கொடுத்தால் உங்களுடைய செல்போனை ஹேக் செய்து விடுவார்கள்.

மேலும் வங்கிக்கணக்கில் இருந்து பணத்தையும் திருடிவிடுவார்கள். மர்மநபர்கள் சிலர் செல்போனில் தொடர்பு கொண்டு உங்களுக்கு பார்சல் வந்துள்ளது என்றும் கூறி பணத்தை திருட முயற்சிப்பார்கள். போலியான பார்சலை நம்பி ஏமாற வேண்டாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்