பணம் இல்லாததால் வீட்டுக்கு தீ வைத்த மர்ம நபர்கள்

பணம் இல்லாததால் வீட்டுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர்.

Update: 2022-09-08 17:14 GMT

தேவகோட்டை,

தேவகோட்டை ராம்நகர் 4 வீதியில் புதுக்கோட்டை மாவட்டம் கண்ணமங்கலம் கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் (வயது 70), அவரது மனைவி குழந்தை திரோஸ் (65) வசித்து வந்தனர். குழந்தை திரோஸ் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் திருமணத்திற்காக சென்று விட்டார். இதற்கிடையே வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் நகை, பணம் கிடைக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் வீட்டில் தீ வைத்துவிட்டு தப்பி சென்றனர். நேற்று அதிகாலை வீட்டில் தீப்பற்றி எரிவதை பார்த்த அக்கம்பக்கத்தினர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் வீட்டிலிருந்த பத்திரங்கள், துணிகள், சான்றிதழ்கள் முழுமையாக எரிந்து சேதம் அடைந்தது. மேலும் மர்ம நபர்கள் வீடு முழுவதும் மிளகாய் பொடியை தூவி சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேவகோட்டையில் வீடுகளில் கொள்ளையடிக்க வரும் மர்ம நபர்கள் தீ வைத்து செல்லும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. இதுவரை 8 வீடுகளுக்கு தீ வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags:    

மேலும் செய்திகள்