மர்மமான முறையில் செத்து மிதந்த மீன்கள்

ஆம்பூர் அருகே மீன்கள் செத்து மிதந்தன.

Update: 2023-05-13 17:53 GMT

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் பாலாற்றின் கரையோரம் நேற்று திடீரென ஆயிரக்கணக்கான மீன்கள் மர்மமான முறையில் செத்து மிதந்தன. தண்ணீரில் கழிவுநீர் கலப்பதால் மீன்கள் இறந்ததா? அல்லது வேறு காரணமா என தெரியவில்லை.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்பு ஆம்பூர் அடுத்த கொமேஸ்வரம் பாலாற்றில் ஆயிரக்கணக்கான மீன்கள் கரையோரமாக செத்து கிடந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்