என் குப்பை என் பொறுப்பு விழிப்புணர்வு கூட்டம்

பேரணாம்பட்டு நகராட்சி அலுவலகத்தில் 'என் குப்பை என் பொறுப்பு' விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

Update: 2022-06-26 14:11 GMT

பேரணாம்பட்டு நகராட்சி அலுவலகத்தில் தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் திட்டத்தின் கீழ் 'என் குப்பை என் பொறுப்பு' என்கிற தலைப்பில் வீடுகளில் மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்குதல் குறித்த விழிப்புணர்வு கூட்டம், ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தமாட்டேன் என்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பேரணாம்பட்டு நகரமன்ற தலைவர் பிரேமா வெற்றிவேல் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஆலியார்ஜூபேர் முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையாளர் சுபாஷினி வரவேற்றார்.

நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், நகராட்சி ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து பேரணாம்பட்டு பஸ் நிலையத்தில் பொது மக்கள், பயணிகள் மத்தியில் உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. தனியார் ஷூ கம்பெனியில் பணிபுரியும் சுமார் 200 பணியாளர்களுக்கு என் குப்பை என் பொறுப்பு என்ற தலைப்பில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை வீடுகளில் தரம் பிரிந்து வழங்குதல் மற்றும் தடை செய்யப்பட்டுள்ள ஒருமுறை பயன்படுத்தி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. மேலும், இஸ்லாமியா மேல்நிலைப்பள்ளியில் 50-க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு என் குப்பை என் பொறுப்பு என்ற தலைப்பில் கட்டுரை போட்டி மற்றும் ஓவிய போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் மரீத்ஜகுர் அஹம்மத், தலைமை ஆசிரியர் ஹிமாயூன் பாஷா மற்றும் மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்