குடிநீர் சீராக வினியோகம் செய்யக்கோரி திருமுருகன்பூண்டி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
முற்றுகை
திருமுருகன்பூண்டி நகராட்சி 3 மற்றும் 4-வது வார்டு பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. அங்கு 20 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் குடிநீர் சீராக வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் 4-வது வார்டு கவுன்சிலர் ஏ.ஆர்.கே. கார்த்திகேயன் தலைமையில் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக கமிஷனர் அப்துல் ஹாரிப்ஸ் சந்தித்து முறையிட்டனர். அப்போது கோடை காலத்தில் குடிநீர் இல்லாமல் அவதிப்படுவதாக கூறிய பொதுமக்கள் கமிஷனரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
குடிநீர் வினியோகம்
இதையடுத்து 8 நாட்களுக்கு ஓருமுறை குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கமிஷனர் உறுதியளித்தார். இதன் பின்னரே பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பர