ஆபத்தான நிலையில் முத்தப்பன் காவிரி வாய்க்கால் பாலம்
மயிலாடுதுறை அருகே ஆபத்தான நிலையில் உள்ள முத்தப்பன் காவிரி வாய்க்கால் பாலத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய பாலம் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
மயிலாடுதுறை அருகே ஆபத்தான நிலையில் உள்ள முத்தப்பன் காவிரி வாய்க்கால் பாலத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய பாலம் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முத்தப்பன் வாய்க்கால் பாலம்
மயிலாடுதுறை அருகே கும்பகோணம் சாலையையும், கல்லணை சாலையையும் இணைக்கும் வகையில் மாப்படுகை - சித்தர்காடு இடையே இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலையில் 20-க்கும் மே ற்பட்ட பள்ளி வாகனங்கள், மினிபஸ்கள் மற்றும் பல்வே று வாகனங்கள் சென்று வருகின்றன. பொதுமக்கள் தங்கள் வாகனங்களிலும், மோட்டார் சைக்கிளிலும் இந்த சாலையை கடந்து தான் சென்று வருகின்றனர். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில் காவிரி ஆற்றுப்பாலம் அருகில் முத்தப்பன் காவிரி வாய்க்கால் பாலம் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது.
ஆபத்தான நிலையில்
இந்த பாலத்தின் அடிப்பகுதியில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்தும், அதன் கீழ் உள்ள சுவர்கள் சேதம் அடைந்தும் காணப்படுகிறது. பாலத்தின் மேல் பகுதி உடைந் து சுவர் இல்லாமல் ஆபத்தான நிலையில் அந்தரத்தில் தொங்குகிறது. இந்த வழியாக கனரக வாகனங்கள் சென்றால் பாலம் உடைந்து விடும் அபாயம் உள்ளது. எனவே பெரும் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பு உரிய நடவடிக்கை எடுத்து ஆபத்தான நிலையில் உள்ள முத்தப்பன் வாய்க்கால் பாலத்தை இடித்து அகற்றி விட்டு அந்த இடத்தில்புதிய பாலம் கட்ட வே ண்டும் என அப்பகுதி பொதுமக்கள, வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர் கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நடவடிக்கை
இதுகுறித்து மாப்படுகையை சேர்ந்த இயற்கை விவசாயி ராமலிங்கம் கூறுகையில்:- கடந்த சில மாதங்களாக முத்தப்பன் காவிரி வாய்க்கால் பாலம் சிதலமடைந் து மோசமான நிலையில் உள்ளது. இந்த சாலையின் வழியே ஏராளமான பள்ளி வாகனங்கள் சென்று வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலரிடம் பலமுறை தெ ரிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை . எனவே குழந்தை கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி ஆபத்தான நிலையில் உள்ள பாலத்தை அகற்றி விட்டு விரைவில் புதிய பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வே ண்டும் என்றார்.