முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

செரியலூர்- கரம்பக்காடு முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2022-06-09 18:26 GMT

கீரமங்கலம்:

திருப்பணிகள்

புதுகோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே செரியலூர்-கரம்பக்காடு கிராமத்தின் காவல் தெய்வமாக முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கிராமத்தினர் மற்றும் நன்கொடையாளர்கள் பக்களிப்போடு பரிவார தெய்வங்களுக்கான திருப்பணிகள், பிரமாண்ட ராஜகோபுரம் அமைக்கப்பட்டு கும்பாபிஷேகத்திற்காக நாள் குறிக்கப்பட்டது. இந்தநிலையில் கடந்த 6-ந்தேதி யாகசாலை பூஜைகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து பல்வேறு யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு கிராமங்களில் இருந்து ஆட்டம் பாட்டத்துடன் சீர் கொண்டு வந்த நிகழ்வுகளும் நடந்தது.

கும்பாபிஷேகம்

இதைதொடர்ந்து இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதை முன்னிட்டு யாகசாலையில் கலசங்களில் புனிதநீர் ஊற்றி வைத்து பூஜை செய்யப்பட்டது.

பின்னர் மேள தாளத்துடன் சிவாச்சாரியார்கள் கலசங்களை தலையில் சுமந்து கொண்டு கோவிலை வலம் வந்தனர். பின்னர் கோவில் ராஜகோபுரத்தில் உள்ள கலசங்களுக்கு வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பின்னர் புனிதநீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. 3 இடங்களில் அமைக்கப்பட்டிருந்த 5 அன்னதான பந்தல்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.

பக்தர்கள் தரிசனம்

கும்பாபிஷேகத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஒன்றியக்குழு உறுப்பினர் சுமதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருஞானசம்மந்தம், செரியலூர் ஜெமின் ஊராட்சி மன்ற தலைவர் அலமுகார்த்திகா நிவாஸ் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை கிராமத்தினர் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை கீரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் செய்திருந்தனர். ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு துறையினரும் தயார் நிலையில் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்