முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா

முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது.

Update: 2023-05-21 19:43 GMT

ஆவுடையார்கோவில் குறிச்சிக்குளத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு பூச்சொரிதல் விழா நடை பெற்றது. விழாவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து ஒன்றியக்குழுத்தலைவர் உமாதேவி தலைமையிலும், ஒன்றியக்குழுத் துணைத்தலைவர் பிரியா குப்புராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், தமிழ்செல்வன் முன்னிலையில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய அலுவலர்கள் பூக்களை அலங்கரிக்க வாகனத்தில் எடுத்து கொண்டு ஊர்வலமாக முத்துமாரியம்மன் கோவிலுக்கு வந்தனர்.

இதேபோல் வருவாய்த்துறை அலுவலகத்திலிருந்து தாசில்தார் மார்ட்டின் லூதர் கிங் தலைமையில் பூக்களை கோவிலுக்கு எடுத்து சென்றனர். தமிழ்நாடு மின்சார வாரியம், நெடுஞ்சாலைத்துறை அலுவலகம், போலீஸ் நிலையம், ஆட்டோ சங்கத்தினர்கள், வேன் ஓட்டுனர் சங்கத்தினர் மற்றும் பல்வேறு அலுவலகத்திலிருந்தும் பூக்களை கோவிலுக்கு எடுத்து சென்றனர். இதேபோல் ஆவுடையார்கோவில் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமானவர்கள் வாகனங்களிலும், ஏராளமான பெண்கள் பூக்களை தலையில் எடுத்துக்கொண்டு நான்கு வீதிகளின் வழியாக கோவிலுக்கு எடுத்து வந்தனர். பின்னர் அவர்கள் கொண்டு வந்த பூக்களை எல்லாம் அம்மனுக்கு சாற்றி வழிபட்டனர். தொடர்ந்து பல்வேறு இடங்களில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்