முத்துமாரியம்மன் கோவில் திருவிழா

முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.

Update: 2022-08-19 12:10 GMT

கொள்ளிடம் டோல்கேட், ஆக.20-

திருச்சி நெ.1 டோல்கேட் அருகே உள்ள கீரமங்கலம் கிராமத்தில் முத்துமாரியம்மன், இலையாயி அம்மன் மற்றும் பனையடி கருப்பு சாமி கோவில் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி காப்பு கட்டி விரதம் இருந்த கிராம மக்கள் நேற்று காலை 10 மணிக்கு கொள்ளிடம் ஆற்றில் இருந்து தீர்த்த குடம் மற்றும் முளைப்பாரி எடுத்துக்கொண்டு ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். தொடர்ந்து இரவு 9 மணிக்கு கொள்ளிடம் ஆற்றில் இருந்து அம்மனுக்கு பால்குடம், அக்னிச்சட்டி, விமான அலகு மற்றும் கம்பி அலகு குத்தி வீதியுலா வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதனையடுத்து இன்று (சனிக்கிழமை)அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் மாவிளக்கு எடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 3 ஆண்டுகளுக்கு பிறகு இக்கோவில் திருவிழா நடைபெற்றதால் இதில் திரளானோர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்