முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

வல்லத்தில் முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

Update: 2022-10-30 18:45 GMT

செஞ்சி, 

செஞ்சியை அடுத்த வல்லம் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. கும்பாபிஷேக நாளான நேற்று காலை 2-ம் கால யாக சாலை பூஜை, கோ பூஜை, நாடி சந்தானம் ஆகியவை நடந்தது. தொடர்ந்து யாக சாலையில் இருந்து மேள, தாளம் முழங்க கடம்புறப்பட்டு சென்று கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள முருகன், விநாயகர் கோவிலிலும் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்