முத்தாலம்மன் கோவில் திருவிழா

கூடலூரில் முத்தாலம்மன் கோவில் திருவிழா நடந்தது.

Update: 2022-11-16 18:45 GMT

கூடலூரில் மேற்கு முத்தாலம்மன் கோவில் திருவிழா நேற்று நடந்தது. விழாவில் அம்மன் புறப்பாடு ஊர்வலம் நடைபெற்றது. இதையொட்டி பக்தர்கள் மாவிளக்கு எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர். மாலையில் பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து சிவன், காளி, கிருஷ்ணன், நாரதர் போன்ற வேடங்கள் அணிந்து டிராக்டர் வண்டிகளில் பக்தர்கள் ஊர்வலமாக நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்