முருகன் மீதான வழக்கு விசாரணை 24-ந்தேதிக்கு ஒத்திவைப்பு
பெண் ஜெயில் அலுவலரை பணி செய்யவிடாமல் தடுத்த முருகன் மீதான வழக்கு விசாரணை 24-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலையான முருகன் தற்போது திருச்சி ஜெயில் வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2020-ம் ஆண்டு முருகனின் அறையை ஜெயில் காவலர்கள், பெண் ஜெயில் அலுவலர் சோதனை செய்தனர். இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து பெண் ஜெயில் அலுவலரை பணி செய்ய விடாமல் தடுத்து அவதூறாக பேசியதாக பாகாயம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை வேலூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் (எண்-4) நடைபெற்று வருகிறது.
இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
ஆனால் திருச்சியில் இருந்து முருகன் அழைத்து வரப்படவில்லை.
அதனால் காணொலி காட்சி மூலம் விசாரணை நடந்தது. வழக்கின் விசாரணையை மாஜிஸ்திரேட்டு வருகிற 24-ந் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.