மண் கொள்ளை தொடர்பாக போஸ்டர் ஒட்டியவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் - ஊராட்சி மன்ற தலைவர் மீது வழக்குப்பதிவு

ஏரி மண் கொள்ளை தொடர்பாக போஸ்டர் ஒட்டியவர்கள் மீது தாக்குதல் நடத்திய ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2022-12-18 17:38 GMT

விழுப்புரம்,

செஞ்சி அருகே ஏரி மண் கொள்ளை தொடர்பாக போஸ்டர் ஒட்டியவர்கள் மீது தாக்குதல் நடத்திய மீனம்பூர் ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மீனம்பூர் ஊராட்சி மன்ற தலைவர் முன்வர்அலி ஏரி மண் கொள்ளையில் ஈடுபடுவதாக அக்கிராம பொதுமக்கள் பெயரில் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

இதனால் ஆத்திரமடைந்த முன்வர்அலி மகன் லியாகத் அலி உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்டோர் போஸ்டர் ஒட்டிய தரப்பினர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இது தொடர்பாக போஸ்டர் ஒட்டிய தரப்பினர் அளித்த புகாரின் பேரில் ஊராட்சி மன்ற தலைவர் முன்வர்அலி அவரது மகன் லியாகத்அலி மற்றும் மேலும் ஐந்து பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் முன்வர்அலி அளித்த புகாரின் பேரில் போஸ்டர் ஒட்டிய தரப்பை சார்ந்த ஐந்து பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Full View

Tags:    

மேலும் செய்திகள்