நாமக்கல்லில் கல்லால் தாக்கி ஓட்டல் ஊழியர் கொலை

Update: 2023-06-16 18:45 GMT

நாமக்கல்லில் இருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் தானிய சேமிப்பு கிடங்கு உள்ள கிரீன் கார்டன் செல்லும் சாலையின் ஓரத்தில் அடையாளம் தெரியாத சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் கிடந்தது. உடலின் அருகே மஞ்சை பைகள், ரத்தக்கரை படிந்த கற்கள் மற்றும் பழங்கள் சிதறி கிடந்தன. தகவல் அறிந்த நாமக்கல் துணை போலீஸ் சூப்பிரண்டு தனராசு, போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் இறந்து கிடந்தவர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்களை வரவழைத்து போலீஸ் தடயங்களை சேகரித்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டவர், வால்பாறையை சேர்ந்த ஓட்டல் ஊழியர் கண்ணன் என்பது தெரியவந்தது.

மேலும் அவரை யார் கொலை செய்தார்கள்? என்பது குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல் அந்த வழியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்