மீனவரின் தலையில் கல்லை போட்டு கொலை

பாம்பன்் ரெயில் நிலையம் அருகே பாம்பனில் மீனவரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-06-11 18:45 GMT

ராமேசுவரம், 

பாம்பன்் ரெயில் நிலையம் அருகே பாம்பனில் மீனவரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கல்லை போட்டு கொலை

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன்(வயது 45). மீனவர். நேற்று முன்தினம் இரவு பாம்பன் ரெயில் நிலையம் அருகே முருகன் மற்றும் அவருடன் மீன் பிடிக்க செல்லும் ராமநாதபுரத்தை சேர்ந்த சேவியர், நெல்லையை சேர்ந்த பிரபு, நாகப்பட்டினத்தை சேர்ந்த ராமர் ஆகிய 4 பேரும் சேர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர்.

அப்போது குடிபோதையில் இருந்த முருகனை, சேவியர், பிரபு, ராமர் ஆகியோர் சேர்ந்து அவரது தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது. நேற்று காலையில் முருகன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்து அவ்வழியாக சென்றவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

3 பேர் கைது

அதன்பேரில் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை சம்பவ இடத்திற்கு சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து பாம்பன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவரத்தினம், சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் கொலையுண்ட முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சேவியர், ராமர், பிரபு ஆகியோரை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்