முனியப்பசுவாமி கோவில் திருவிழா

முனியப்பசுவாமி கோவில் திருவிழா நடைபெற்றத.

Update: 2023-08-16 18:39 GMT

தரகம்பட்டி அருகே உள்ள சென்னம்பட்டி நம்பிகுளம் கரையில் பிரசித்தி பெற்ற முனியப்பசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்தாண்டும் திருவிழாவையொட்டி திரளான பக்தர்கள் சென்னம்பட்டி கோவில் வீட்டில் இருந்து பூஜை கூடைகள், ஆபரண பெட்டிகளை தாரை தப்பட்டை முழங்க வானவேடிக்கைகளுடன் முனியப்பசுவாமி கோவிலுக்கு கொண்டு சென்றனர். பின்னர் முனியப்ப சுவாமிக்கு மலர்கள் மற்றும் ஆபரணங்கள் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சென்னம்பட்டி உள்பட 18 பட்டி கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்ட கிடாய்களை வெட்டி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும் சில பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற்றியதற்காக புதிதாக வேல் எடுத்து வந்து காணிக்கையாக செலுத்தினர். இரவு சுவாமிக்கு சிறப்பு படையலுடன் பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்