களக்காடு:
களக்காடு நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம், அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது. நகராட்சி தலைவர் சாந்தி சுபாஷ் தலைமை தாங்கினார். நகராட்சி துணைத்தலைவர் பி.சி.ராஜன், ஆணையாளர் (பொறுப்பு) கண்மணி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலான கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளில் சீராக குடிநீர் வினியோகம்செய்ய வேண்டும். வாறுகால், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி பேசினர்.
அ.தி.மு.க. கவுன்சிலர் ஆயிஷா பேகம், தனது வார்டில் எந்த வளர்ச்சி திட்ட பணிகளும் நிறைவேற்றப்படவில்லை என்று கூறி வெளிநடப்பு செய்தார்.
துணைத்தலைவர் பி.சி.ராஜன் பேசுகையில், ''குடிநீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய களக்காடு மலையடிவாரத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து சீராக குடிநீர் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்படும். அரசு அறிவிக்கும் திட்டங்களை அதிகாரிகள் உடனுக்குடன் செயல்படுத்த வேண்டும''் என்றார்.