வளர்ச்சி திட்ட பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குனர் ஆய்வு

வளர்ச்சி திட்ட பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குனர் ஆய்வு செய்தார்.

Update: 2023-06-10 18:34 GMT

குளித்தலை நகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை நேற்று நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா ஆய்வு மேற்கொண்டார்.

முதலில் குளித்தலை பஸ் நிலையத்தில் நகராட்சி நிர்வாகம் மூலம் ரூ.74 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டு பணிகளை பொன்னையா ஆய்வு செய்து கூடுதல் செலவினங்களுக்கு கருத்துரு அனுப்பினால் நிதி ஒதுக்கி தருவதாக அதிகாரியிடம் தெரிவித்துள்ளார். பின்னர் பஸ் நிலைய முகப்பு பகுதியில் உள்ள கட்டிட பயன்பாட்டை வேறு இடத்திற்கு மாற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசுவதாக தெரிவித்துள்ளார். பின்னர் குளித்தலை நகராட்சி அலுவலகத்திற்கு சென்ற பொன்னையா நகராட்சிக்கு புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்து தருவதாகவும், அது தொடர்பாக கருத்துரு அனுப்ப வேண்டுமென நகராட்சி அதிகாரியிடம் தெரிவித்தார். தொடர்ந்து குளித்தலை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் எரிவாயு மயான கட்டுமான பணிகள், பெரியார் நகர் பகுதியில் அம்ருத் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது, குளித்தலை நகராட்சித்தலைவர் சகுந்தலா பல்லவிராஜா, ஆணையர் (பொறுப்பு) மனோகர், நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்