நகராட்சி, பேரூராட்சி ஊழியர்கள் சாலை மறியல்

கள்ளக்குறிச்சியில் சாலை மறியலில் ஈடுபட்ட நகராட்சி, பேரூராட்சி ஊழியர்கள் 32 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-07-12 18:45 GMT

கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதற்கு கிளை தலைவர் காசிநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர்கள் அன்புதுரை, சம்பத், மாவட்ட துணைச் செயலாளர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் நகராட்சி, பேரூராட்சிகளில் நிரந்தர பணியிடங்களை ஒழித்து தனியார்கைகளில் அளிக்கும் அரசாணை 152 மற்றும் 133-ஐ உடனடியாக திரும்ப பெற வேண்டும். அனுமதிக்கப்பட்ட ஊதியம், 8 மணி நேர வேலை, வார விடுப்பு, பண்டிகை கால விடுப்பு, தேசிய விடுப்பு காலங்களில் பணி செய்தால் விடுப்புடன் இரட்டிப்பு ஊதியம் உள்ளிட்ட அடிப்படை சட்டங்களை அமல்படுத்த வேண்டும். நகராட்சி, பேரூராட்சி தூய்மை பணியாளர்களின் குடியிருப்புகளை பழுது நீக்கம் செய்து தர வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட துணை செயலாளர் கண்ணன், மாவட்ட செயலாளர் வீராசாமி, மாவட்ட பொருளாளர் செந்தமிழ்ச்செல்வன் மற்றும் நிர்வாகிகள் சரவணன், கோவிந்தராஜ், ஏழுமலை உள்பட நகராட்சி மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட 32 பேரை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர்லால், இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்