கோபி நகராட்சியில் சிறப்பு தூய்மை பணி முகாம்

கோபி நகராட்சியில் சிறப்பு தூய்மை பணி முகாம்

Update: 2022-12-24 21:26 GMT

கடத்தூர்

கோபி நகராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் என்ற பொருளில் "எனது குப்பை எனது பொறுப்பு" என்ற தலைப்பில், ஒவ்வொரு மாதமும் 2 மற்றும் 4-ம் சனிக்கிழமைகளில் சிறப்பு துப்புரவு பணி முகாம் நடைபெறுகிறது. இந்த வாரம் மின் நகர் பகுதியில் நடைபெற்ற சிறப்பு துப்புரவு பணி முகாமுக்கு நகராட்சி தலைவர் என்.ஆர். நாகராஜ் தலைமை தாங்கினார். ஆணையாளர் பிரேம் ஆனந்த் முன்னிலை வகித்தார்.

இதில் ஆஞ்சநேயா நகர், மின் நகர் குடியிருப்போர் நலச் சங்கம் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். அப்போது ஒவ்வொரு வீட்டிலும் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் என்றும், குப்பைகளை தெருக்களில் கொட்ட மாட்டேன் என்றும் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள். நிகழ்ச்சியில் துப்புரவு அலுவலர் சோழராஜ், துப்புரவு ஆய்வாளர்கள் செந்தில்குமார், கார்த்திக், ஆகியோர் கலந்து கொண்டனர்.

துப்புரவு பணி மேற்பார்வையாளர் சக்தி வேலு, விஜயன், செல்வகுமார் தூய்மை பாரத திட்ட பரப்புரையாளர்கள் பூங்கொடி, கிருஷ்ணன், காளியம்மாள், அருள், மஞ்சுநாதன், வைஷ்ணவி, மேற்பார்வையாளர்கள் அருள் பிரசாத், சத்யா ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்