சந்தன காப்பு அலங்காரத்தில் முனீஸ்வரர்
சந்தன காப்பு அலங்காரத்தில் முனீஸ்வரர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
திருவரங்குளம் அருகே பொற்பனை கோட்டை முனீஸ்வரர் கோவிலில் ஆடி சிறப்பு வழிபாடு நடைபெற்று வந்தது. இதையடுத்து ஆடி கடைசி ஞாயிற்றுக்கிழமை விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதையடுத்து பொற்பனை முனீஸ்வரருக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (திங்கட்கிழமை) கிடா வெட்டு பூஜை நடைபெற உள்ளது.