கோவில் கொடை விழாவில் முளைப்பாரி ஊர்வலம்

கோவில் கொடை விழாவில் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.

Update: 2022-07-19 19:43 GMT

களக்காடு:

களக்காடு நாடார் புதுத்தெரு முப்பிடாதி அம்மன் கோவில் கொடை விழா நேற்று முன்தினம் தொடங்கியது. இதையொட்டி ஆற்றில் இருந்து கும்பம் எடுத்து வரப்பட்டது. 2-ம் நாளான நேற்று மதியம் சுவாமிகள் மஞ்சள் நீராடும் வைபவம் நடந்தது. மாலையில் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. அதன் பின்னர் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மேளதாளங்கள் முழங்க, முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர். நள்ளிரவில் அம்மன் அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். தொடர்ந்து சுடலைமாட சுவாமிக்கு ஆடு, கோழிகள் பலியிட்டு பக்தர்கள் நேர்ச்சை செலுத்தினர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்