பவானி அம்மன் கோவிலில் முளைப்பாரி ஊர்வலம்

பழமையான பவானி அம்மன் கோவில் திருவிழாவில் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.

Update: 2023-07-22 08:07 GMT

பெரியபாளையம், 

எல்லாபுரம் ஒன்றியம், மாகரல் கிராமத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ பவானி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் முளைப்பாரி ஊர்வலம் செல்லும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.

இந்நிலையில், நேற்று ஆடி மாதம் முதல் வாரத்தையொட்டி கூழ் ஊற்றுதல் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதை முன்னிட்டு மூலவர் அருள்மிகு ஸ்ரீ பவானி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றது.

இதை தொடர்ந்து காப்பு கட்டி விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் தங்களது தலையில் முளைப்பாரியை சுமந்து கொண்டு கோவிலில் இருந்து சிவன் கோவில் தெரு, பிள்ளையார் கோவில் தெரு உள்ளிட்ட முக்கிய தெருக்களின் வழியாக ஊர்வலம் சென்றனர். பின்னர், முளைப்பாரிக்கு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து முளைப்பாரியை அல்லாரம் குளத்தில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாகரல் கிராம பொதுமக்களும், பக்தர்களும் சிறப்பாக செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்