முளைப்பாரி ஊர்வலம்

முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.;

Update:2023-08-28 00:15 IST

சாயல்குடி, 

கடலாடி இந்திரா நகர் 2-வது தெருவில் நாதஸ்வர நையாண்டி மேளகார இந்து பறையர் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட சந்தன மாரியம்மன், கருப்பணசாமி, செல்வ விநாயகர் கோவில் முளைப்பாரி பொங்கல் உற்சவ விழா நடைபெற்றது. கடந்த 18-ந் தேதி கடற்கரை சென்று தீர்த்த நீராடி கொடியேற்றத்துடன் அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து கணபதி ஹோமம், அபிஷேக ஆராதனை நடந்தது.

நேற்று முன் தினம் நடந்த 108 திருவிளக்கு பூஜையில் பெண்கள் கலந்து கொண்டனர். சோம விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. அக்னி சட்டி, ஆயிரம் கண் பானை, அழகுவேல், பூக்குழி இறங்குதல், பூத்தட்டு உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை பக்தர்கள் நிறைவேற்றினா். நேற்று முளைப்பாரி எடுத்து பெண்கள் முக்கிய வீதிகளின் வழியாக சென்று கங்கை நீரில் கரைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்