முளைப்பாரி ஊர்வலம்

கமுதி அருகே முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.;

Update:2023-08-09 00:15 IST

கமுதி, 

கமுதி அருகே கருங்குளம் சக்தி மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழாவில் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. இக்கோவிலில் ஆடித்திருவிழா கடந்த 28-ந் தேதி தொடங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், அலங்காரம் நடந்தது. மேலும் பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து அம்மனை வழிபட்டு வந்தனர். இதில் பெண்கள் கோவில் முன்பு பொங்கல் வைத்து வழிபட்டனர்.

பிறகு அக்னி சட்டி எடுத்து சேத்தாண்டி வேடம் அணிந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். முக்கிய நிகழ்ச்சியாக 200-க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி சுமந்து கோவில் வளாகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று நீர் நிலையில் முளைப்பாரியை கரைத்தனர். இதில் கமுதி, கருங்குளம், பாக்குவெட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்