முளைப்பாரி திருவிழா

முளைப்பாரி திருவிழா நடைெபற்றது.;

Update:2023-08-03 00:15 IST

இளையான்குடி, 

இளையான்குடி அருகே உள்ள அரியாண்டிபுரம் கிராமத்தில் வடக்கு தெரு கிராம பொதுமக்கள் சார்பில் மழைவேண்டி முத்துமாரியம்மன் கோவிலில் முளைப்பாரி திருவிழா நடந்தது. கிராமத்தினர் காப்பு கட்டி விரதம் இருந்து விவசாய பணிகளை தொடங்கும் காலமான ஆடிப்பட்டம் நெல் விதைப்பிற்காக மழை வேண்டி முளைப்பாரி வளர்த்து முத்துமாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தினர். முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து வேதாந்த மடத்தில் சிறப்பு வழிபாடுகள் நடத்தி, கும்மி கொட்டி, கரகம் ஆடி வழிபாடுகள் செய்தனர். முளைப்பாரி திருவிழாவின் ஊர்வலம் வேதாந்த மடத்தை வந்தடைந்து மடாதிபதி மாதவ குமார சுவாமிகள் சிறப்பு வழிபாடுகள் செய்து மடத்தின் அருகில் உள்ள குளத்தில் கரைத்தனர். குளத்தில் முளைப்பாரிகளை மூழ்கடிக்க தண்ணீர் இல்லாததால் போர்வெல் தண்ணீரை நிரப்பி முளைப்பாரிகளை தண்ணீரில் மூழ்கடித்தனர். முளைப்பாரி திருவிழா ஏற்பாட்டினை அடியாண்டிபுரம் வடக்கு தெரு இளைஞர் மன்றத்தினர் செய்திருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்