மிஸ்டர் இந்தியா ஆணழகன் போட்டியில்டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி மாணவர் சாதனை
மிஸ்டர் இந்தியா ஆணழகன் போட்டியில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி மாணவர் சாதனை படைத்துள்ளார்.
திருச்செந்தூர்:
சென்னை துரைப்பாக்கம் டி.பி. ஜெயின் கல்லூரி வளாகத்தில் தேசிய அளவிலான மிஸ்டர் இந்தியா ஆணழகன் போட்டி நடைபெற்றது. இதில் மாவட்டம் மற்றும் மாநில அளவில் 300-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி தகவல் தொடர்பியல் துறை 3-ம் ஆண்டு மாணவர் எல்.சிவபாலன், பாடிபில்டிங் போட்டியில் 70 கிலோ எடை ஜூனியர் பிரிவில் முதல் இடம் பிடித்து மிஸ்டர் இந்தியாவாக தேர்வாகி சாதனை படைத்துள்ளார். இவர் இதற்கு முன்பு மாநில அளவிலும், தென் இந்திய அளவிலும் முதலிடம் பிடித்துள்ளார்.
சாதனை படைத்த மாணவரை கல்லூரி முதல்வர் ஜி.வைஸ்லின் ஜிஜி, உடற்கல்வி இயக்குனர் ஜே.தேவராஜ் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினார்கள்.