நெல் கொள்முதல் நிலையத்தில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஆய்வு
திருச்சிற்றம்பலம் அருகே உள்ள குறிச்சி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பழனிமாணிக்கம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அண்ணாதுரை, அசோக்குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
திருச்சிற்றம்பலம் அருகே உள்ள குறிச்சி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பழனிமாணிக்கம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அண்ணாதுரை, அசோக்குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
மழை பாதிப்புகள்
தஞ்சை மாவட்டம் பேராவூரணி பகுதியில் மழையினால் ஏற்படட்ட பாதிப்புகள் குறித்து தஞ்சை எம்.பி.பழனிமாணிக்கம், எம்.எல்.ஏ.க்கள் அண்ணாதுரை, அசோக்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான விவசாயிகளிடம் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தனர். குறிச்சி நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும், அதன் அருகிலும் ஆயிரக்கணக்கான நெல்மூட்டைகளை குவித்து வைத்துள்ள விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதற்காக காத்து கிடக்கிறார்கள்.
இந்த நிலையில் நெல்லின் ஈரப்பதத்தை பார்க்காமல், உடனடியாக விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்ய வேண்டும். மேலும், தினசரி ஆயிரம் மூட்டைகளுக்கு குறையாமல் கொள்முதல் செய்ய வேண்டும் என எம்.பி. அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
இழப்பீடு கிடைக்க நடவடிக்கை
பாதிக்கப்பட்ட நெல் வயல்களை எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அதிகாரிகள் குழுவினர் பார்வையிட்டனர். தொடர்ந்து, வேளாண் அலுவலர்களிடம் பாதிக்கப்பட்ட விளை நிலங்களை கணக்கெடுத்து நெல், கடலை பாதிப்புகளுக்கு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினர்.
அப்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் உமா மகேஸ்வரி, பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன், தாசில்தார் ராமச்சந்திரன், வேளாண் அலுவலர்கள், மாவட்ட கவுன்சிலர்கள் அலிவலம் மூர்த்தி, சுவாதி காமராஜ், பேராவூரணி வடக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோவன், தி.மு.க. நிர்வாகி அப்துல் மஜீத், ஒன்றிய கவுன்சிலர் நவநீதம் ஆறுமுகம், குறிச்சி தியாகராஜன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.