ஏற்காட்டுக்கு இலகு ரக வாகனங்கள் இயக்கம்

சேலம்-கோரிமேடு வழியாக ஏற்காட்டுக்கு இலகு ரக வாகனங்கள் இயக்கப்பட்டன. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2023-05-06 20:22 GMT

ஏற்காடு


சேலம்-கோரிமேடு வழியாக ஏற்காட்டுக்கு இலகு ரக வாகனங்கள் இயக்கப்பட்டன. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சாலை சீரமைப்பு

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் கடந்த 2021-ம் ஆண்டு மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ஒரு வார காலத்தில் மணல் மூட்டைகள் மட்டும் அடுக்கப்பட்டு தற்காலிகமாக பாதை சீரமைக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு மண்சரிவு ஏற்பட்ட இடிபாடுகள் மற்றும் சாலை சீரமைக்கும் பணி ரூ.1 கோடியே 90 லட்சம் மதிப்பில் கடந்த 24-ந் தேதி தொடங்கியது.

சாலை சீரமைப்பு பணி காரணமாக பாதுகாப்பு கருதி சேலம் கோரிமேடு வழியாக ஏற்காட்டுக்கு இருசக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தன. மற்ற வாகனங்கள் குப்பனூர் வழியாக ஏற்காட்டுக்கு சென்று வந்தன.

10 நாட்களுக்கு மேல் ஆகியும் இதுவரை நிறைவடையாத நிலையில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நலன் கருதி நேற்று முதல் இலகுரக வாகனங்கள் மட்டும் சென்று வர மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. இதையடுத்து சேலம்-கோரிமேடு வழியாக நேற்று முதல் இலகு ரகு வாகனங்கள் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து இலகு ரக வாகனங்கள் ஏற்காட்டுக்கு இயக்கப்பட்டன. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

குறைந்த வேகத்தில்...

இதுகுறித்து அதிகாரிகள் கூறும் போது, 'வருகிற 10-ந் தேதிக்குள் சாலை சீரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவு பெறுகிறது. அதைத்தொடர்ந்து 11-ந் தேதி முதல் அனைத்து வாகனங்களும் வந்து செல்ல அனுமதிக்கப்படும். மேலும் கொண்டை ஊசி வளைவுகளில் வாகனத்தை இயக்கும் போது குறைந்த வேகத்தில் செல்ல வேண்டும்' என்றனர்.

அதே நேரத்தில் ஏற்காடு மலைப்பாதையில் சீரமைக்கும் பணிகள் நடைபெறும் இடத்தில் 10-க்கும் மேற்பட்ட நெடுஞ்சாலை ஊழியர்கள் போக்குவரத்தை சீர் செய்து போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் கவனத்துடன் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்