மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் படுகாயம்

சாத்தான்குளம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்டதில் வாலிபர் படுகாயம் அடைந்தார்.

Update: 2022-12-23 18:45 GMT

சாத்தான்குளம்:

மணப்பாடு லாசர் தெருவைச் சேர்ந்த ராஜசேகர் மகன் கபிலன் (வயது 23). இவர் சாத்தான்குளத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை வருகிறார். சம்பவத்தன்று இவர் வேலை முடிந்து இரவு வீடு திரும்பினார். அப்போது எதிரே விஜயராமபுரம் சுந்தரலிங்கம் மகன் பாலா (18), அவரது நண்பர் துரைமுத்துவுடன் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தார். சாத்தான்குளம் காந்திநகர் தெரு அருகில் சென்றபோது எதிர்பாராத விதமாக இரண்டு மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் மோட்டார்சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட கபிலன் பலத்த காயமடைந்தார். அவர் நாகர்கோவிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்