மோட்டார் சைக்கிள்கள் மோதல்
தேனியில் மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.;
அல்லிநகரம் கிணற்று தெருவைச் சேர்ந்தவர் ஹரிகரன் (வயது 20). இவர், அவரது நண்பர் சந்தோஷ்குமார் (15), ஈஸ்வரன் (16) ஆகியோருடன் சேர்ந்து ஒரு மோட்டார் சைக்கிளில் ரத்னா நகரில் இருந்து அல்லிநகரம் நோக்கி வந்தனர். அப்போது அவர்கள் பெரியகுளம்-தேனி ரோட்டில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அருகே சாலையை கடப்பதற்காக நின்றனர். அவர்கள் மோட்டார் சைக்கிள் மீது அல்லிநகரத்தை சேர்ந்த விஷால் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த ஹரிகரன், சந்தோஷ்குமார், ஈஸ்வரன் ஆகிய 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து அல்லிநகரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.