கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்: வாலிபர் பலி

கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.;

Update:2023-09-19 07:45 IST

கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு அருகே உள்ள எம்.என்.கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் திவாகர் (வயது30). தனியார் தொழிற்சாலையில் ஊழியராக வேலை செய்து வந்த இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

கடந்த சனிக்கிழமை இரவு மாதர்பாக்கத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் எம்.என்.கண்டிகையில் உள்ள தனது வீட்டிற்கு திவாகர் சென்று கொண்டிருந்தார். அப்போது அமரம்பேடு கூட்டுச்சாலையில் சாலையை கடக்க முயன்ற மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது திவாகர் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் எதிர்பாரத விதமாக மோதியது.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த திவாகரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர்.

அங்கு சிசிச்சை பலனின்றி திவாகர் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். சாலையை கடக்க முயன்ற மற்றொரு மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற சுரேஷ் குமார் (36), சேகர் (40) ஆகிய 2 பேர் லேசான படுகாயம் அடைந்த நிலையில் சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து பாதிரிவேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்