மோட்டார் சைக்கிள் திருடியவர்கள் கைது

அரக்கோணம் அருகே மோட்டார்சைக்கிள் திருடியவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-08-19 18:27 GMT

அரக்கோணம்

அரக்கோணம் அருகே மோட்டார்சைக்கிள் திருடியவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அரக்கோணம் இரட்டை குளம் சோதனை சாவடியில் நேற்று முன்தினம் இரவு அரக்கோணம் தாலுகா போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை போலீசார் சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர்.

அதில் அவர்கள் அரக்கோணத்தை அடுத்த பாராஞ்சி பகுதியை சார்ந்த சுதன் (வயது 22) மற்றும் ஆந்திர மாநிலம் நாயுடு பேட்டை பகுதியை சார்ந்த சுரா நாகேஷ் (21) என்பது தெரியவந்தது. இருவரும் அரக்கோணத்தை அடுத்த உளியம்பாக்கம் பகுதியை சேர்ந்த லாசர் (25). என்பவரது மோட்டார் சைக்கிளை திருடியதை ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து சதன் மற்றும் ராகேஷை போலீசார் கைது செய்தனர்.நேற்று காலையும் தாலுகா போலீசார் சாலை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த இளைஞரை போலீசார் விசாரித்த போது பெருமாள் ராஜபேட்டை பகுதியை சார்ந்த குணசேகர் (24). என்பதும் அந்த பகுதியில் கஞ்சா விற்றதும் தெரியவந்தது இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்