மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது
மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது செய்யப்பட்டார்
மதுரை செல்லூர் மேலவைத்தியநாதபுரம் சிங்கம் பிடாரி கோவில் தெருவை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 26). சம்பவத்தன்று இவர் ஆரப்பாளையம் பை-பாஸ் ரோட்டில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்திருந்தார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அவர் இது குறித்து கரிமேடு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். மேலும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது, அதில் மோட்டார் சைக்கிளை திருடியவர் குறித்த அடையாளம் தெரிந்தது. அதை தொடர்ந்து போலீசார் தேனி மெயின் ரோடு எஸ்.எம்.எஸ். காலனி புது வாழ்வு நகரை சேர்ந்த முனியாண்டி (47) என்பவரை கைது செய்தனர்.