மோட்டார்சைக்கிள்கள் திருடியவர் கைது

மோட்டார்சைக்கிள்கள் திருடியவர் கைது

Update: 2023-01-08 18:45 GMT

நாகூர் பெரியார் தெருவை சேர்ந்த குலாம் தஸ்தகீர் மகன் பாவா பக்ருதீன். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவர் சீயாமரைக்காயர் தெருவில் உள்ள பள்ளி வாசலுக்கு தொழுகைக்கு சென்ற போது மோட்டார்சைக்கிளை வெளியே நிறுத்தி இருந்தார். பின்னர் தொழுகை முடிந்து வெளியே வந்து பார்த்த போது மோட்டார்சைக்கிள் திருட்டு போனது தெரியவந்தது. உடனடியாக அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் ஆய்வு செய்தபோது மர்மநபர் ஒருவர் ோட்டார்சைக்கிளை திருடி சென்றது பதிவாகி இருந்தது. இதுகுறித்து நாகூர் போலீசாரிடம் பாவாபக்ருதீன் புகார் அளித்தார். அதன்ே்பரில் நாகூர் போலீசார் நாகூர் அலங்கார வாசலில் சந்தேகப்படும்படி நின்ற நபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ் சிதம்பரம் கஞ்சி தொட்டி மேட்டுதெருவை சேர்ந்த அப்சுல் (48) என்பதும், 4 மோட்டார்சைக்கிளை திருடி மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்சுலை கைது செய்து அவரிடம் இருந்த 4 மோட்டார்சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்