மோட்டார்சைக்கிள் திருடியவர் கைது
வந்தவாசியில் மோட்டார்சைக்கிள் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
வந்தவாசி
வந்தவாசி பாலு உடையார் தெருவை சேர்ந்தவர் வாசுமூர்த்தி. இவர் தனது வீட்டின் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்துவது வழக்கம்.
இந்த நிலையில் இன்று காலை எழுந்து பார்த்தபோது மோட்டார்சைக்கிளை காணவில்ைல.
மர்ம நபர்கள் திருடி சென்றது ெதரிய வந்தது. இதையடுத்து அவர் வந்தவாசி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில் திருவள்ளுர் மாவட்டம் நெடுங்கல் கிராமம் சந்திரசேகர்புரத்தைச் சேர்ந்த சந்திரசேகர் (வயது 37) என்பவர் மோட்டார்சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
மேலும் வழக்குப்பதிவு செய்து, சந்திரசேகரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.