மோட்டார்சைக்கிள் திருடியவர் கைது
மோட்டார்சைக்கிள் திருடியவர் கைது செய்யப்பட்டாா்.
கடத்தூா்
கோபி அருகே உள்ள கோட்டு புள்ளாம்பாளையத்தை சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 46). விவசாயி. சம்பவத்தன்று இவர் தன்னுடைய மோட்டார்சைக்கிளை கோபி சந்தை அருகே உள்ள தனியார் வங்கி முன்பு நிறுத்திவிட்டு சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது மோட்டார்சைக்கிளை காணவில்லை. யாரோ மர்ம நபர் அவருடைய மோட்டார்சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது.
இதேபோல் மொடச்சூரை சேர்ந்த வியாபாரியான நடராஜ் (64) என்பவர் வியாபாரத்துக்காக கோவை சந்தை பகுதிக்கு மோட்டார்சைக்கிளில் வந்து உள்ளார். மோட்டார்சைக்கிளை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு வியாபாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது அவருடைய மோட்டார்சைக்கிளை மர்ம நபர் திருடி சென்றுவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார்சைக்கிளை திருடி சென்றவரை வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் கோபி பஸ் நிலையம் பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்ற ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், 'அவர் கோபி அருகே உள்ள காசிபாளையம் பகுதியை சேர்ந்த பூவேந்திரன் (48) என்பதும், அவர்தான் கதிர்வேல், நடராஜ் ஆகியோரின் மோட்டார்சைக்கிள்களை திருடி சென்றதும்,' தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பூவேந்திரனை போலீசார் கைது செய்ததுடன், அவரிடம் இருந்து 2 மோட்டார்சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.