மோட்டார் சைக்கிளை திருடியவர் கைது
மோட்டார் சைக்கிளை திருடியவர் கைது செய்யப்பட்டார்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள என்.புதூர் கிராமத்தை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 60). இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். பின்னர் சிறிது நேரம் கழித்து வெளியே வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை மர்ம ஆசாமி திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து காளியப்பன் கொடுத்த புகாரின் பேரில் வி.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடிய உத்தரப்பிரதேச மாநிலம் அசாம் மாநிலத்தை சேர்ந்த பிபின் யாதவ் (22) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.