பயிற்சி டாக்டர் உள்பட 2 பேரின் மோட்டார் சைக்கிள் திருட்டு

பயிற்சி டாக்டர் உள்பட 2 பேரின் மோட்டார் சைக்கிள் திருட்டு போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Update: 2023-06-22 20:15 GMT

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பயிற்சி டாக்டர் உள்பட 2 பேரின் மோட்டார் சைக்கிள் திருட்டு போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மோட்டார் சைக்கிள் திருட்டு

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த அமரகுந்தி பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவருடைய மனைவி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளதால் பிரசவத்திற்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மனைவியை பார்க்க செல்வம் நேற்று முன்தினம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு தனது மோட்டார் சைக்கிளில் வந்தார்.

பின்னர் அவர் அங்குள்ள அம்மா உணவகம் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார். செல்வத்தின் மோட்டார் சைக்கிளை யாரோ திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

பயிற்சி டாக்டர்

இதேபோல், சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பயிற்சி டாக்டராக பணியாற்றி வருபவர் ரிகானா (26). இவர், ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியுள்ளார். வார்டு முன்பு நிறுத்தியிருந்த அவரது மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர். இதுபற்றி பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் சேலம் அரசு ஆஸ்பத்திரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆஸ்பத்திரி வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் திருடர்களின் உருவங்கள் பதிவாகியுள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் தொடரும் மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்கள் நோயாளிகள், அவருடைய உறவினர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்