மோட்டார் சைக்கிள் திருட்டு

நெல்லை கங்கைகொண்டானில் தனியார் நிறுவன ஊழியரின் மோட்டார் சைக்கிளை மர்மநபர் திருடிச் சென்றார்.

Update: 2023-01-23 19:51 GMT

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி- எட்டயபுரம் ரோடு பகுதியை சேர்ந்த சுப்பையா மகன் அக்கையா (வயது 35). இவர் நெல்லை கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் சம்பவத்தன்று வேலைக்கு சென்ற போது தனது மோட்டார் சைக்கிளை அங்குள்ள வாகன காப்பகத்தில் நிறுத்தி இருந்தார்.

திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை மர்மநபர் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்