விழுப்புரம் பள்ளிவாசல் முன்புமோட்டார் சைக்கிள் திருட்டு
விழுப்புரம் பள்ளிவாசல் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
விழுப்புரம் ஆர்.பி. நகர் பகுதியை சேர்ந்தவர் பாஷா (வயது 34). இவர் விழுப்புரம் வாலாஜா பள்ளிவாசல் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு பள்ளிவாசலுக்கு சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது அந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் அதை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.1 லட்சமாகும். இதுகுறித்து பாஷா, விழுப்புரம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் மோட்டார் சைக்கிள் திருட்டு தொடர்பாக சந்தேகத்தின்பேரில் 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.