மோட்டார் சைக்கிள் திருட்டு
நெல்லை அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை அருகே தாழையூத்து சர்ச் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி மகன் பாபு. இவர் தனது மோட்டார் சைக்கிளை நாரணம்மாள்புரத்தில் நிறுத்தி இருந்தாா். திரும்பி வந்து பார்த்த போது மர்மநபர் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து பாபு தாழையூத்து போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் இன்னோஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.