சின்னசேலத்தில் கிராம நிர்வாக அலுவலரின் மோட்டார் சைக்கிள் திருட்டு
சின்னசேலத்தில் கிராம நிர்வாக அலுவலரின் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
சின்னசேலம்,
சேலம் மாவட்டம் தலைவாசல் அடுத்த ஊனத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி மகன் தினேஷ்பாபு (வயது 37). அதேஊரில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இவர் சம்பவத்தன்று இரவு சின்னசேலம் வாரச்சந்தை அருகே பாண்டியன்குப்பம் ரோட்டில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, காய்கறி வாங்க சென்றார். பின்னர் அவர் திரும்பி வந்து பார்த்தபோது, மோட்டார் சைக்கிளை காணவில்லை. அதனை மர்மநபர் யாரோ திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் சின்னசேலம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குபதிவு செய்து, மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற மர்ம நபரை தேடி வருகிறார்.