மோட்டார் சைக்கிள் திருட்டு

மோட்டார் சைக்கிள் திருடு போனது.

Update: 2023-10-02 19:02 GMT

விருத்தாசலம், 

விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அலியார் தெருவை சேர்ந்தவர் அசைன் பாஷா மகன் சாதிக் பாஷா (வயது 43). இவர் விருத்தாசலம் பாலக்கரையில் உள்ள ஒரு ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று வேலைக்கு சென்ற அவர் கடையின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். பின்னர், வேலை முடிந்து வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அதை யாரோ மர்மநபர் திருடிச்சென்றது தெரிந்தது. இதுகுறித்து விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் சாதிக் பாஷா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்