மோட்டார் சைக்கிள்- ஷேர் ஆட்டோ மோதல்; கொத்தனார் பலி
மோட்டார் சைக்கிள்- ஷேர் ஆட்டோ மோதிய விபத்தில் கொத்தனார் பலியானார்.
கொத்தனார்
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை விவேகானந்தா நகர் பகுதியை சேர்ந்தவர் பாபு (வயது 48), கொத்தனார். இவர் தன்னுடைய நண்பரான ஆசைத்தம்பி (வயது 40) என்பவருடன் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் வண்டலூர்- வாலாஜாபாத் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
வைப்பூர் காரணித்தாங்கல் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே அதே திசையில் வந்த ஷேர் ஆட்டோ மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயம் அடைந்தனர்.
சாவு
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த பாபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஆசை தம்பியும் படுகாயம் அடைந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த ஒரகடம் போலீசார் ஆசைத்தம்பியை மீட்டு சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.