நாகர்கோவிலில்மோட்டார் சைக்கிள் பந்தயம்; 8 பேருக்கு அபராதம்

நாகர்கோவிலில் மோட்டார் சைக்கிள் பந்தயம் நடத்திய 8 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.;

Update:2023-08-28 22:52 IST

நாகர்கோவில்:

நாகர்கோவில் மாநகரில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக வாலிபர்கள் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை கண்டறிந்து போலீசார் நடவடிக்கை எடுக்கிறார்கள்.

இந்த நிலையில் ஓணம் கொண்டாட்டத்தை முன்னிட்டு நேற்று இந்து கல்லூரி அருகே சில வாலிபர்கள் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடுவதாக நாகர்கோவில் போக்குவர்த்து ஒழுங்குப்பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் தலைமையில் போலீசார் விரைந்து சென்று கண்காணித்தனர். அப்போது சில வாலிபா்கள் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக சென்றது உறுதி செய்யப்பட்டது. அந்த வகையில் 8 பேரின் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் 8 பேருக்கும் மொத்தமாக ரூ.26 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது

Tags:    

மேலும் செய்திகள்