ரயில்வே பாதுகாப்பு படையினர் மோட்டார் சைக்கிள் ஊர்வலம்
ரயில்வே பாதுகாப்பு படையினர் மோட்டார் சைக்கிள் ஊர்வலமாக சென்றனர்
75-வது சுதந்திர தின விழாவையொட்டி சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் விதமாக தென்னக ரயில்வே சார்பில் `ஆசாதி கா அம்ரித் மஹோத்ஸவ்' என்ற பெயரில் மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஊர்வலத்தில் திருச்சி கோட்டத்தில் இருந்து ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் 10 பேர் பங்கேற்கின்றனர். திருச்சி கோட்டத்தில் இருந்து செல்லும் வீரர்கள் அடுத்த மாதம் 13-ந் தேதி டெல்லி சென்றடைந்து அங்கு நடைபெற உள்ள சுதந்திர தின விழாவில் பங்கேற்க உள்ளனர். அந்தவகையில் கடந்த 1-ந் தேதி திருச்சியில் இருந்து புறப்பட்ட வீரர்கள் நேற்று மயிலாடுதுறை ரயில் நிலையம் வந்தடைந்தனர். அவர்களுக்கு மயிலாடுதுறை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து மயிலாடுதுறையில் இருந்து புறப்பட்ட மோட்டார் சைக்கிள் ஊர்வலத்தை ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சுதீப்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம், ரயில் நிலையத்தில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் ரயில் நிலையத்தை அடைந்தது. பின்னர் மோட்டார் சைக்கிள் ஊர்வலம் சிதம்பரம் நோக்கி சென்றது.